புங்குடுதீவு தலையபற்று முருகமூர்த்தி ஆலயம்
இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும் வாழ்கின்ற இக்கிராமத்தில் இவ் சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி வேல் பெருமாள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார்.
இவ் ஆலயத்தின் தொன்மையை வரலாற்றை அடுத்து நோக்குவோமாக இருந்தால் புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தில் தல்லையப்பற்று என்று 1800 – 1900 வரையான காலப்பகுதியில் தீவகத்தில் ஒரு நிர்வாக அலகாக இருந்தததாக சொல்லப்படுகிறது. இவ் ஆலயம் யாழ்ப்பாணம் கச்சேரியில் உள்ள பதிவேடுகளின் படி 1892 ஆம் ஆண்டு தீவக மணியகாரர் மகள் இராமாசிப்பிள்ளை அவர்களால் சுண்ணாம்புக் கட்டடத்தில் வேலை மூலவராகக் கொண்டு மடாலயமாய்க் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது மேலும்