மண்டலாபிஷேக பூர்த்தியும் 1008 சங்காபிஷேக நிகழ்வும்

முருகப் பெருமான் அடியார்களே

முருகப்பெருமானுடைய மண்டலாபிஷேக பூர்த்தியும் 1008 சங்காபிஷேக நிகழ்வும் 2023.04.16. ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்

அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி வேல்ப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மற்றும் ,முத்து குமார சுவாமிக்கு விஷேட அபிஷேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சண்முகப் பெருமானுக்கு சண்முகா அர்ச்சனையும் இடம்பெறும்.

இரவு நிகழ்வுகள் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகி எம் பெருமானுக்கு விஷேட வசந்த மண்டப பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து திருவூஞ்சல் பாடப்பெற்று எம் பெருமான் உள்வீதி வெளி வீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.

பகல் இரவு அன்னதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகல் இரவு நிகழ்வுகள் அனைத்தும் சிவன் ரிவி யில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய படும்.

நன்றி.